சென்ற இதழில் இடம்பெற்ற "முன்னோரின் கர்மாவைச் சுமப்பவர்கள் யார்?' கட்டுரையின் தொடர்ச்சி...

Advertisment

பலவகையான தோஷம் இருந்தாலும், கிரகண தோஷம் பலவிதமான நெருடலை மனிதர்களுக்குத் தந்துகொண்டேதான் இருக்கிறது. கிரகண தோஷத்திற்குப் பல தீர்வுகள் உண்டு. முதலில் கிரகணம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றிவரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றிவரும்.

அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில், ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை. அதே நேரத்தில் சூரிய, சந்திரர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180 டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும்.

Advertisment

vv

அதேபோல் பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்குநேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் வரும்போது சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதேடிகிரியில் சேரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.

நடப்பு விகாரி வருடத்தில் இரண்டு சூரிய கிரகணமும், ஒரு சந்திர கிரகணமும் நடக்கவுள்ளன.

சூரிய கிரகணம்

Advertisment

26-12-2019 (மார்கழி 10) வியாழக்கிழமை காலை 8.00 மணிமுதல் பகல் 1.35 மணிவரை மூல நட்சத்திரத்தில் நிகழும். கேது கிரஹஸ்த பகுதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும்.

சந்திர கிரகணம்

17-7-2019 (ஆனி 31) புதன்கிழமை இரவு 1.31 மணிமுதல்

அதிகாலை 4.30 மணிவரை உத்திராட நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரகஸ்த பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். கிரகணம் தோராயமாக மூன்று மணி நேரம் நிகழ உள்ளது.

சந்திர கிரகணம் என்பது, நிலா பூமியின் பின்னால் கடந்துசெல்லும்போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின்மீது படுவதி லிருந்து மறைத்து விடுவதால் ஏற்படுவதாகும்.

விண்வெளியிலுள்ள அனைத்துக் கோள்களும் சூரியனின் ஒளியைப் பெற்று இயங்குவதால், சூரிய ஒளி யிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் மற்றும் அகச் சிவப்புக் கதிர்களே பூமிக்குப் பரிபூரண இயக்கத்தைத் தருகின்றன. இந்த சூரிய ஒளியை நிழல் கிரகங்களான ராகு- கேதுக்கள் மறைக் கும்போது பூமிக்குக் கிடைக்கும் ஒளிசக்தித் திறன் குறைகிறது. அதனால் கிரகணகாலத்திற்கு முன்பின் ஏழு நாட்கள் பூமிக்கு தோஷ காலமாகும்.

ஆன்மாவின் ஜனனம்

பூமியில் ஜனனமாகும் ஒரு ஆன்மா தன் வினைப்பதிவு முழுமையாக அனுபவிக் கக்கூடிய கிரக நிலவரம் எப்பொழுது வருகிறதோ, அப்பொழுதுதான் பிறப் பெடுக்கும். சூரிய கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தந்தைவழிக் கர்மா வையும், சந்திர கிரகணத்தில் பிறக்கும்

குழந்தைகள் தாய்வழிக் கர்மாவையும் அதிகமாகச் சுமந்து பிறக்கும். கிரகணம் சம்பவிக்கும்போது ராகு- கேது, சூரியன், சந்திரன் இணைவுபெறும் கிரகங் களும், அதன் சொந்த பாவகங்களும், நின்ற பாவகங்களும் பாதிப்படையும். கிரகணம் சம்பவிக்கும்போது சூரியன் + ராகு- கேது அல்லது சந்திரன் + ராகு- கேது சேர்க்கையை குரு பார்த்தாலோ அல்லது சேர்ந்திருந்தாலோ சுபத்தன்மை மிகுதியாக இருக்கும். குரு சம்பந்தம்பெறும் கிரகணத்தில் பிறந்த குழந்தைகள் எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள்.

அவர்களுக்கு சூட்சும சக்திகள் மிகுதியாக இருக்கும். தீயசக்திகள், பில்லி சூனியம், மாந்த்ரீகம், செய்வினை எளிதில் தாக்காது. சூரியன் + ராகு- கேது சேர்க்கையுடன் சனி, செவ்வாய் தொடர்பு பெற்று பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ஊனம், நோய்த் தாக்கம், மனவளர்ச்சிக் குறைவு, ஆயுள் குறைவு, போதிய கல்வியின்மை, திருமணத் தடைகளால் பெரிதும் பாதிப்படை கின்றனர்.

17- 7- 2019 (ஆனி 31)-ஆம் தேதி நடக்கும் கிரகணத்திற்கு சனி சம்பந்தம் உள்ளது. ஆத்மகாரகன் சூரிய பகவானுடன் ராகு சேரும் போது ஆன்மிகத்தன்மை அற்றவராகவும், ஆன்மபலம் குறைந்தவராகவும், சூரியனால் கிடைக்கக்கூடிய அரசாங்க யோகம் கிடைக் காது. தந்தையின் ஆதரவின்மை, பூர்வீகத் விட்டு வெளியேறும் நிலை, முன்னேற்ற மின்மையும் ஏற்படும்.

ராகு- கேதுவால் ஏற்படும் பிரச்சினைக்கு, அவர்களை கிரகண நேரங்களில் வழிபட நற்பலன் மிகுதியாகும்.

நியாயமான, நிறைவேறாத கோரிக்கை உடையவர்கள், ஜனனகால ஜாதகத்தில் கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்ட வர்கள் கிரகண நேரத்தில் சமுத்திரத்தில் நீராடி, தியானம், ஜபம் செய்தால் ஆன்ம பலம் கிடைக்கும். ஆன்மா சுத்தியடையும்போது அடையமுடியாத வெற்றியே கிடையாது.

மேலும் 17-7-2019 புதன்கிழமை ஆடி மாதம் 1-ஆம் தேதி தட்சிணாயன புண்ணியகாலம்.

ஆடி மாதப் பிறப்பிற்குமுன் விடியற்காலை நான்குமணிக்குள் சந்திர கிரகண தர்ப்பணம் செய்தால் மூன்று தலைமுறை முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைந்து, பிறவிப் பெருங் கடனி(ல்) இருந்து மீண்டு சுகவாழ்வு பெறமுடியும்.

கிரகணம் நடந்துகொண்டிருக்கும் போது கிரகண தர்ப்பணம் செய்ய இயலாத வர்கள் காயத்ரி மந்திர ஜபம், ராம நாமப் பாராயணம், திருக்கோளறு பதிகம் பாராயணம் செய்யலாம்.

பொழுது விடிந்ததும் காலை 6.00 மணிக்கு மேல் சூரிய உதயத்தின்போது (ஆடி 1) தட்சிணா யன புண்ணிய கால தர்ப்பணம் செய்ய வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லக் கூடாது.

உயிர் காக்கத் தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் ஒருநாள் கழித்து அறுவை சிகிச்சை செய் யலாம். அறுவை சிகிச்சை அவசியம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இடுப்பில் சர்ப்பம் தரித்த விநாயகரை வழிபட்டு சிகிச்சை செய்யலாம்.

பூராடம், உத்திராடம், திருவோணம், கிருத்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங் களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்வது சிறப்பு.

செல்: 98652 20406